பெங்களூரு ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்தபோது, தன்னை சுற்றியிருந்தவர்கள் யாரும் ஒரு நடிகராக தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதது தனது ஆணவத்தை முற்றிலுமாக தகர்த்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்கள் காட்டிய அமைதியும், ஆன்மிக ஈடுபாடும் தன்னை வியக்க வைத்ததாகவும், புகழை விட ஆன்மிகமே மேலானது என்பதை உணர்ந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.