தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ், தமிழக முதலமைச்சர் விஜயை விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “தமிழகத்தை தாண்டினால் முதலமைச்சர் விஜயை யாருக்கும் தெரியாது. விஜயின் அரசியல் செல்வாக்கு தமிழகத்துக்குள் மட்டுமே இருக்கிறது. மாநிலத்தை கடந்து அவரது அரசியல் தாக்கம் இல்லை“ என்று சாடினார். ‘முதலமைச்சர் விஜய் தான் அடுத்த பிரதமர்’ என தவெக அமைச்சர்கள் கூறிவரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.