யாரும் உயிர்தப்ப வாய்ப்பில்லை - குஜராத் காவல்துறை

ஏர் இந்திய விமான விபத்தில் யாரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என அகமதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணம் செய்த ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 170 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த நபர்கள் யாரும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என குஜராத் மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி