இனி ட்ரூ காலர் ஆப் தேவையில்லை!

புதிய எண்ணில் இருந்து போன் செய்பவரின் பெயரை அறிய சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ட்ராய் (TRAI) கூறியுள்ளது. தற்போது, தெரியாத எண்களில் இருந்து அழைப்பவர்களின் பெயரை அறிய, ட்ரூ காலர் போன்ற செயலிகளை பலர் பயன்படுத்தி வருகின்ற நிலையில், ட்ரூ காலரைப் பயன்படுத்தாமல் அழைப்பவரின் பெயரை அறியும் வசதியை டிராய் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. நாடு முழுவதும் இந்த பெயர் விளக்கச் சேவை இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஷவ்மி போன்ற சில போன்களில் இந்த அம்சம் ஏற்கனவே உள்ள நிலையில், டிராய் இதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்தி