நவோதயா பள்ளிகள் வேண்டாம்.. உதயநிதி பரபரப்பு பதிவு

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்றும் தேவைப்பட்டால் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையை, அரசியல் வேறுபாடுகளை கடந்து உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம் என கூறியுள்ளார். நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕