கொரோனாவுக்கு நாட்டு மருந்தை அங்கீகரிக்கவில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாட்டு மருந்தை கொரோனா தொற்று சிகிச்சைக்கு அங்கீகரித்ததாக பரவும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை என்னென்ன வழிகாட்டுதல்கள் மற்றும் தடுப்பூசி வழங்க அறிவுறுத்துகிறதோ, அதைத்தான் அரசு செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.