தமிழ்நாடு மின்சார வாரியம், மக்களின் வசதிக்காக புதிய “EB Auto Pay” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. www.tnpdcl.org இணையதளத்தில் சென்று “EB Auto Pay” வசதியை தேர்வு செய்து, மின் இணைப்பு எண், வங்கிக் கணக்கு அல்லது GPay UPI விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, மின்பயன்பாட்டு கணக்கீடு செய்யப்பட்ட 10-வது நாளில் கட்டணம் தானாகவே வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனால், மின்கட்டண அபராதத்தை தவிர்க்க முடியும்.