அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு இல்லை.. தவெக கண்டனம்!

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் வரும் நவ.6-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்படாததால் திமுக அரசுக்கு தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம்  தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சி என்ற நிலையிலும், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதை தவெக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிபந்தனை மாற்றப்படாவிட்டால் சட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி