சென்னை: "குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது" என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒலி மாசினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அதில், “ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளை இரவு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது. அமைதி மண்டலங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது” என குறிப்பிட்டுள்ளது. ஒலி மாசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: Kalaignarnews