ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு எடுக்கவில்லை - அமைச்சர் நிர்மல்குமார்

மின் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய மின்துறையின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டுக்குள் 15,000 பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர் என்றும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களிடையே விவாதப் பொருளாக இருக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைப் பொறுத்தவரை, அதைப் பொருத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி