தமிழ்நாடு முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டி இல்லை

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் உள்ள ஒரே கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அக்கட்சியின் தலைவர் விஜய் உறுதியளித்த போதும் ஒரு கட்சியும் இதுவரை வரவில்லை. இந்த சூழலில் தவெக கூட்டணியில் உள்ள ஒரே கட்சியான தமுலீ கட்சியும் பின்வாங்கியுள்ளது. விஜய் இந்த முறை தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி