வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ வட்டி. 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி இதுகுறித்து முடிவு எடுக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 0.25% குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி 5.25% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ரெப்போ வட்டி 5.25% ஆகவே தொடரும் என ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் இந்த முறை வட்டி குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த லோன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நன்றி: ANI