ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்ட் மாதத்திற்கான நிதி ஆய்வு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் தற்போதைய 5.25% என்ற அளவிலேயே தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகளாவிய புவி-அரசியல் மாற்றங்கள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்க அச்சம் ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலே வட்டி விகிதத்தில் மாற்றமில்லாததால், கடன்களுக்கான EMI மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போதைக்கு மாறாமல் தொடர்ந்து நீடிக்கும்.

தொடர்புடைய செய்தி