சென்னையில் இன்று (15.05.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.65-க்கும், டீசல் ரூ.95.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.