சென்னையில் இன்று (பிப்., 14) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 100.84-க்கும், டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றன. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 66.49 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகிறது.