2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று (டிச.18) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை உறுதிப்படுத்திவிட்டோம். பாஜக தவிர பிற கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்றார்.