பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். பாட்னாவில் இன்று (நவ., 20) நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆரிப் முகமதுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பாஜக, ஜேடியு, எல்ஜேபி அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 202 இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. ஆர்ஜேடி 25 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ANI