கோவையில் சோகம்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் தலைமலை. இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.  இவரது 2வது மகள் பாப்பா (20). பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.,30) வீட்டில் பாப்பா திடீரென மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பாப்பா ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்ய பெற்றோரிடம் கேட்டபோது, மூத்த மகள் திருமணத்தை நடத்தி விட்டு பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் பாப்பா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி