வாகன விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கேவை தனியார் கல்லுாரி மாணவர் பைக் விபத்தில் பலியானார். கோவையில் தனியார் கல்லுாரியில் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிக்கும் கோவையை சேர்ந்த ஆறு மாணவர்கள் 3 பைக்குகளில் நேற்று (செப்.,23) வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.

வால்பாறை அடுத்துள்ள சோலையாறு டேம் செல்லும் போது எதிரே வந்த தனியார் எஸ்டேட் ஆம்புலன்ஸ் மீது அவர்களது ஒரு பைக் மோதியது. விபத்தில் பைக் ஓட்டி சென்ற கோவை பீளமேட்டை சேர்ந்த மதியழகன் மகன் ஸ்ரீகாந்த், (20) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் பைக்கில் சென்ற ரோசன் (20) படுகாயமடைந்தார். விபத்து குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி