சத்தியமங்கலம் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர், மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கெளவுஸ் மைதீன் (47), ரவி (47), வீரன் @ ஆண்டிச்சாமி (47), கிருஷ்ணகுமார் (36), குமார் (45) ஆகிய 5 பேர் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் நேற்று (ஜனவரி 9) கைது செய்து, அவர்களிடமிருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.