வேலாண்டிபாளையம்: கால் டாக்ஸி டிரைவர் தற்கொலை

கோவை வேளாண்டிபாளையம் மருது கோனார் வீதியை சேர்ந்தவர் செல்வம். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் வினோத்குமார் (24), கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சம்பவத்தன்று வினோத்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். தனது படுக்கையறைக்கு சென்றவர் கதவை உட்பக்கமாக பூட்டி கொண்டார். இரவு பெற்றோர்கள் உணவு அருந்த அழைத்த போது கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோத்குமார் மின்விசிறியில், சேலையால் தூக்கிட்டு நேற்று (அக்.,5) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி