கோவை: கார் கவரை திருடிச் சென்ற பெண்- சிசிடிவி வைரல்!

கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், நான்கு சக்கர வாகனங்களும் திருடப்பட்டு வருவதாக புகார்களும் எழுந்து வருகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெயில், மழைக்காலங்களில் மற்றும் தூசி அடையாமல் இருப்பதற்கு கவர்களை மாட்டி பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். 

அதுபோன்று கோவை, ராமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது கவர் போடப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அங்கு வந்த ஒரு பெண் காரில் போடப்பட்டிருந்த கவரின் அதில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை நான்கு புறமும் சென்று கழற்றி அந்தக் கவரை சுற்றி தனது கையில் எடுத்துச் சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

அந்தக் காட்சிகள் தற்போழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி