தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமார், இயற்கை உபாதை கழிப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்று நீண்ட நேரம் திரும்பாததால் சக தொழிலாளர்கள் தேடிச் சென்று பார்த்தபோது இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், சதீஷ்குமார் உடலில் காயங்கள் இருந்ததால் சிறுத்தை தாக்கி கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.