நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அளவிலான புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன் பாராட்டு பெற்றார். உதகை பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பில் பயிலும் மாணவன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பானை தயாரிக்கும் கருவி ஒன்றை உருவாக்கி போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார். அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவரை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.