நீலகிரி மாவட்டம் உதகை அருகே கவர்னர்சோலை–பார்சன் வேலி வனப்பகுதியில் நேற்று இரவு நேரத்தில் சாலையை கடந்து சென்ற புலியை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தொடர் உறைபனி காரணமாக வனப்பகுதிகளில் உணவு, நீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், புலி நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.