உதகையில் அதிகபட்சமாக 597. 8 மில்லி மீட்டர் மழை பதிவு

நீலகிரி மாவட்டத்தில் காலை நேர நிலவரப்படி அதிகபட்சமாக 597.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 19.93 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு பகுதிகளுக்கு மிகக் கனமழை பெய்யும் என அறிவித்திருந்தது. இதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் இன்று மற்றும் நாளை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தில் காலை நேர நிலவரப்படி 597.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 19.93 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் உதகையில் 3.8 மில்லி மீட்டர் மழையும், நடுவட்டம் பகுதியில் 32 மில்லி மீட்டர் மழையும், அவலாஞ்சி பகுதியில் 68 மில்லி மீட்டர் மழையும், அப்பர் பவானி பகுதியில் 47 மில்லி மீட்டர் மழையும், கூடலூர் பகுதியில் 38 மில்லி மீட்டர் மழையும், தேவாலப் பகுதியில் 55 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி