நீலகிரி: முறையான அறிவிப்பு இல்லை; சுற்றுலா பயணிகள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அறிவித்த இன்று முழு கடை அடைப்பு என எவ்வித அறிவிப்பும் செய்யப்படாமல் இருந்தது வேதனை அளிக்கிறது என்றும் இ-பாஸ் எடுத்து தான் நாங்கள் நீலகிரிக்கு வந்துள்ளோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்றும் தற்போது ஒரு உணவு விடுதியையோ கடைகளோ செயல்படவில்லை என்றும் தாங்கள் குடும்பத்துடன் நீலகிரிக்கு வருகை புரிந்துள்ளதாகவும், ஆனால் உணவு இல்லாமல் தங்க இடமில்லாமல் அவதி அடைந்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி