தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் உள்ள படகு இல்லத்தில், மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுமண தம்பதியினர், குடும்பத்தினர், நண்பர்களுடன் வந்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.