நீலகிரி: மலை ரயிலின் நிலக்கரி என்ஜினுக்கு வயசு 126

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே முதல் நிலக்கரி என்ஜின் இயக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 15) 126 ஆண்டுகள் நிறைவு பெற்றது. 

மலை மாவட்டமான நீலகிரியில் உலகப் புகழ்பெற்ற மலை ரயில் நூற்றாண்டுகளை கடந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே ஆசியாவிலேயே மிகவும் சரிவான மலை ரயில் பாதை இங்குதான் உள்ளது. 

மேலும், உலகின் மிக நீளமான 46 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எஞ்சின் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 15) 126 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

இந்நாளை ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஹெச்.எஸ்.சி அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி