நீலகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், உதகை, குன்றக்குடி, பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர்.