நீலகிரி மாவட்டம் உதகையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்டோர் உதகை நகர் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து யாசகம் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இருக்கிடம் இல்லாமல் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் முன்பு இரவு நேரங்களில் உறங்கிக் கொள்வது வழக்கம். இவர்கள் காலையில் பொதுமக்களிடம் இருந்து யாசகம் பெற்று இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அப்பகுதி பொதுமக்களை உறங்கவிடாமல் சண்டை போடுவதும், குடித்த மதுபானங்களை உடைத்து சண்டை போட்டுக் கொள்வதும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கூச்சலிட்டுவதும் வழக்கமாக்கி கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு உதகை அப்பர் பஜார் பகுதியில் தாயும் தந்தையும் இருவரும் யாசகம் பெற்ற பணத்தில் முழுபோதையில் குழந்தை சாலையில் அமர்ந்து அழுவதைக் கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையிடம் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு யாசகம் கேட்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருபவர்களை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.