உலகப் புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி நாளை துவங்கப்பட உள்ள நிலையில் 2 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு கடல் வாழ் உயிரினங்களை போன்ற அலங்கரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதில், முத்து, சிற்பி நத்தை, டால்ஃபின், மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடல்வாழ் குதிரை போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் வண்ணமயமான ரோஜா மலர்களை கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோஜா மலர் கண்காட்சிக்காக நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் தனித்தன்மை உடைய மலர் வடிவமைப்புகளை ரசித்து புகைப்படங்கள் எடுத்து வண்ண மலர் அலங்காரங்களை ரசித்து வருகின்றனர். மேலும் நாளை ரோஜா மலர் கண்காட்சி கலைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.