அந்த வகையில் தற்போழுது தாவரவியல் பூங்காவின் உட்புறத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவை பூங்காவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. விரிந்த சூரியகாந்தி மலர்களுக்கு முன்னர் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சூரிய ஒளி பட்டால் மட்டுமே நன்கு விரியக்கூடிய சூரியகாந்தி மலர்கள் சூரிய உதயம் சற்று குறைவாகவே தென்படும் மலை மாவட்டத்திலும் தற்போழுது பூத்துக் குலுங்குவது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூரியகாந்தி மலர்களில் அதிகமான தேன் சுவை உள்ளதால் அந்த மலர்களில் உள்ள தேனை எடுக்க தேனீக்கள் மலர்களை வட்டமிடுவதும் இதனை பொதுமக்கள் கண்டு களிப்பதும் ஒரு அலாதி இன்பமானதாக உள்ளது.