நீலகிரி: அதிமுக சார்பில் விளையாட்டு போட்டி

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களின் 72-வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான கால்பந்து மற்றும் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நீலகிரி மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் அதிமுக சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார். 

தமிழகத்தில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், அதிமுக சார்பில் அனைத்து கிராமங்களிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று உதகை அருகே கப்பச்சி கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, கால்பந்து மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. 

இதனை நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட இறுதி போட்டியில் அச்சனக்கல் அணியை முள்ளிகூர் அணி 5 க்கு 3 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கர் முறையில் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, பேட்மிண்டன் இறுதி போட்டியில் கெங்கமுடி மற்றும் கம்பட்டி அணிகள் மோதின. இதில் 3 க்கு 2 என்ற செட் கணக்கில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் பரிசு கோப்பைகளுடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி