நீலகிரி: கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன். கரடி ஒன்று பட்டபகலில் பாலன் மணி என்பவரது வீட்டில் கதவை உடைத்து வீட்டில் இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு வெளியேறியது. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கரடி வீட்டிலிருந்து வெளியேறியதை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

இது குறித்து வனத்துறைக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதே வீட்டிற்குள் கரடி புகுந்து வீட்டை சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து கிராமத்தில் கரடி நுழைந்து அட்டகாசம் செய்து வரும் நிலையில் கிராம மக்கள் வசிப்பதற்கே மிகுந்த அச்சத்தோடு திக்திக்கென்று பயணத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே கரடியால் அசம்பாவிதம் ஏதும் நேராதமுன்பே வனத்துறை கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் கொண்டுவிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி