குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண வருகை தருகின்றனர். இந்நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பூங்கா நுழைவாயில் பின்புறம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக இருந்த கழிப்பிடம் தற்போது அடைக்கப்பட்டு அருகில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் கழிப்பிடம் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே விரைந்து கழிப்பிட கட்டுமான பணிகளை முடித்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.