உதகை: ஆவின் அங்காடினை திறந்து வைத்த ஆர்.ராசா

உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஆவின் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆவின் சில்லறை அங்காடியினை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ராசா மற்றும் அரசு தலைமை கோயத்தர் க. ராமச்சந்திரன். மேலும் ஆவின் நிறுவனத்தின் சார்பில், நெய் பால்கோவா, குளிர்பானங்கள், இதர பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. தற்போது இன்று புதியதாக திறக்கப்பட்ட ஆவின் புட்டீஸ் உணவகத்தில், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உயர்தர உணவு வகைகளான பன்னீர் செல்லி, பிங்க் பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறது. 

முன்னதாக, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், எதிர்வரும் 06.04.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தேசிய ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவியில் ஆவின் வளாகத்தில், பதப்படுத்தப்பட்ட பாலாடை கட்டிடத்தை தயாரிக்கும் தொழிற்சாலையை அடிக்கல் நாட்டி உள்ளதை முன்னிட்டு, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் திரு. ஜெயராமன், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், உதகை நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், ஆவின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி