பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை - மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபன்சிட்டி பகுதியில் விடுமுறை தினத்தை ஒட்டி உதகைக்கு வருகை புரியும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களிலும் உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதங்கள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இடதுசாரி கூட்டணி தோல்வி.. மீசையை வழித்த தொண்டர்