பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி துறையின் செயல்பாடு உறக்கத்திலேயே உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் லாரிகளில் குடிநீர் தருவதை மட்டுமே கவனத்தில் கொள்ளும் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வாக மோட்டார் வாங்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களது பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு விரைந்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தராவிட்டால் அனைவரும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு