இவ்வழக்கில் தொடர்புடைய பெங்களூர் சிறையிலிருந்து கடந்த வாரம் மாவோயிஸ்ட் சுந்தரி உதகை குடும்ப நல நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு 16ம் தேதி வரை நீலகிரி மாவட்ட காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளா மாநிலம் திருச்சூர் சிறையில் உள்ள சந்தோஷ் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கினை விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி முரளிதரன் மாவோயிஸ்ட் சந்தோஷை 18ம் தேதி வரை மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது குற்றவாளியான சந்தோஷை கேரளா மாநிலம் திருச்சூருக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்