கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே பீச்சனக் கொல்லி பழங்குடியின கிராமத்தில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை ஒன்று மனோஜின் குடிசையை இரண்டாவது முறையாக உடைத்து சூறையாடியது. இந்த சம்பவத்தின் போது குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேறினர். தொடர்ந்து ஊருக்குள் புகும் காட்டு யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைவதாக மக்கள் கூறிய நிலையில், வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.