ஊட்டியில் கோடை சீசனில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, ஸ்மார்ட் டூரிஸ்ட் கியூ-ஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் வாகன நிறுத்த இடங்கள், சாலைகளின் போக்குவரத்து நிலவரம், சுற்றுலா தலங்களை பார்வையிடும் வரிசை போன்ற தகவல்களை சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் எளிதாகப் பெறலாம். இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.