ஊட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 5 ஆண்டுகள் சிறை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது தொழிலாளி செல்வராஜுக்கு ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 11, 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் 2020-ல் நடந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் செல்வராஜை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி