நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக (டேன்டீ) தலைமை அலுவலகத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதியம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ராஜா எம். பி. மற்றும் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் கலந்து கொண்டு ரூ. 35. 42 கோடியை வழங்கினர். 2022 ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் இருந்த ஓய்வுக்கால பணப்பலன்கள் 817 தொழிலாளர்கள், 74 ஓய்வு பெற்ற பணியாளர்கள், 3, 668 தொழிலாளர்களுக்கான விடுப்பு ஊதியம் மற்றும் 1, 353 தொழிலாளர்களுக்கான மருத்துவ விடுப்பு ஊதியம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. விழாவில் புதிய 3 வகை தேயிலைத் தூள்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. டேன்டீ நிறுவனம் லாபகரமாக செயல்பட திட்ட அறிக்கைகள் தயாரிக்க வேண்டும் என ராஜா தெரிவித்தார். நிகழ்ச்சியில் டேன்டீ நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.