ஊட்டி அருகே அதிகரட்டி துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அதிகரட்டி, பாலகொலா, தேவர் சோலை, நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, கொலக்கொம்பை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.