ஊட்டி: பூங்காவில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு தொடக்கம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள 128-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு இந்த பணியை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கொண்டுவரப்பட்ட 275 வகை மலர் விதைகள் மூலம் நாற்றுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி