ஊட்டி: இலக்கிய விழா; மொழி பாதுகாவலருக்கு விருது

ஊட்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி நூலகத்தில் நேற்று இலக்கிய விழா கோலாகலமாகத் துவங்கியது. இலக்கியம், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் 780 மொழிகளைப் பாதுகாக்கும் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், புகழ்பெற்ற மொழியியலாளருமான டாக்டர் கணேஷ் தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

விழா குழு அறங்காவலர் கீதா ஸ்ரீனிவாசன் இந்த விருதை வழங்கி கௌரவித்தார். விழாவின் முதல் நாளான நேற்று, பல அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்து கொண்டு மொழி பாதுகாப்பு மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர். 

வரும் இரண்டு நாட்களில், மொழியியல் உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் நடைபெறவுள்ளன. 40க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர். இன்று, இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சி குறித்த விவாதத்தில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

தொடர்புடைய செய்தி