ஊட்டியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் மாணவியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.