ஊட்டி: மலர் கண்காட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏமாற்றம்

ஊட்டியில் நடைபெற்ற 128-வது மலர் கண்காட்சியை பா. ஜனதா எம். எல். ஏ. போஜராஜன் பார்வையிட்டார். கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்காததும், மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் நடத்தாததும் ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி