நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் வெள்ளேரி கொம்பையைச் சேர்ந்த மறைந்த பழங்குடியின ஓவியர் சு. கிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. அவரது குடும்பம் பொருளாதார சிரமத்தில் இருப்பதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுசிலா தனது மூத்த மகள் வாசுகிக்கு மேற்படிப்புக்கான உதவி கோரினார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதகை ஜெ. எஸ். எஸ். பார்மசி கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை அனுமதி ஆணை வாசுகியிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், கல்லூரி முதல்வர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.